பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 216 பேர் 'டிஸ்சார்ஜ்' :கொரோனாவில் மீண்டோர் 3228 பேர்!

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் நேற்று ஒரே நாளில், 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 216 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில், இளநிலை உதவியாளராக இருக்கும் 35 வயது ஆண் மற்றும் 41 வயது ஆண் ஆகிய இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் பணியாற்றிய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. போத்தனுாரில் 38 வயது ரயில்வே பெண் போலீஸ், அவரது இரு குழந்தைகள், ரயில்வே குடியிருப்பை சேர்ந்த 53 வயது ஆண், உப்பிலிபாளையத்தை சேர்ந்த 25 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.பீளமேடு, செல்வபுரம் பகுதிகளில் தலா 12, உக்கடம் 10, துடியலுார், சரவணம்பட்டி, சுந்தராபுரம் தலா 8 பேர் உட்பட 155 ஆண்கள், 83 பெண்கள் என, மொத்தம் 238 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு, 5,059 ஆக உயர்ந்தது.டாக்டர் உயிரிழப்புகோவை காந்திபுரத்தை சேர்ந்த டாக்டர் பிராணேஷ் 83. இவர், நரம்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றியுள்ளார். ஜூலை 28ல், மூச்சு திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவரும் நேற்று பலியானார். மொத்த இறப்பு 81 ஆக உயர்ந்தது.டிஸ்சார்ஜ் 3,228கோவை இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த, 216 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். பாதிக்கப்பட்ட 5,059 பேரில், இதுவரை, 3,228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்சமயம், 1,750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X