பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு வாழ் தமிழர்கள் பயணம் செல்ல உதவ முதல்வருக்கு கோரிக்கை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சிதம்பரம் : கொரோனாவால் தமிழகத்தில் முடங்கிய வெளி நாட்டு வாழ் தமிழர்கள், மீண்டும் பயணம் செல்ல அந்தந்த மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்து 24 மணி நேரத்தில் முடிவுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் தெற்கு மாவட்ட காங்., துணை தலைவர் நஜிர்அகமது முதல்வருக்கு அனுப்பிய மனு:கொரோனா நோய் பரவலுக்கு முன் ஊருக்கு வந்த பல ஆயிரம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், விமான பயணிகள் சேவை நிறுத்தம் காரணமாக கடந்த 4 மாதங்களாக திரும்பிச் செல்ல முடியாமல் உள்ளனர். துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் குவைத், கத்தார் ஆகிய நாடுகளும், குடியிருப்பு விசா உள்ளவர்கள் திரும்பி வர நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில், கொரோனா வழிகாட்டும் நெறியின் அடிப்படையில், விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக 96 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பஸ்கள் இல்லாததால் வெளி மாவட்டம் சென்று குறுகிய காலத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்வதில் சிக்கல் உள்ளது.ஆகவே, வெளிநாடு செல்லும் பயணிகளின் வசதிகளுக்கேற்ப, சொந்த மாவட்டத்தில் இருக்கும் அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் கோரோனா பரிசோதனை நடத்தி, 24 மணி நேரத்தில் ஆய்வு சான்றிதழ் வழங்க அரசு நடவடக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் நஜிர் அகமது தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X