ரூ.11 லட்சம் கோடிக்கு மொபைல் போன் உற்பத்தி: ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் ஆர்வம்| Apple vendors, Samsung, others propose Rs 11 lakh crore mobile phone production under PLI scheme | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.11 லட்சம் கோடிக்கு 'மொபைல் போன்' உற்பத்தி: 'ஆப்பிள், சாம்சங்' நிறுவனங்கள் ஆர்வம்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020
Share
புதுடில்லி; ''அடுத்த ஐந்து ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, 'மொபைல் போன்' உற்பத்தி செய்யும், மத்திய அரசின் திட்டத்தில் பங்கேற்க, 'ஆப்பிள், சாம்சங், லாவா' உள்ளிட்ட, 22 வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள், ஆர்வம் காட்டியுள்ளன,'' என, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:மொபைல் போன்

புதுடில்லி; ''அடுத்த ஐந்து ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, 'மொபைல் போன்' உற்பத்தி செய்யும், மத்திய அரசின் திட்டத்தில் பங்கேற்க, 'ஆப்பிள், சாம்சங், லாவா' உள்ளிட்ட, 22 வெளிநாடு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள், ஆர்வம் காட்டியுள்ளன,'' என, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.



latest tamil news



இது குறித்து, அவர் கூறியதாவது:மொபைல் போன் உற்பத்தியில், 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டு வர, திட்டமிடப்பட்டு உள்ளது.


latest tamil news



இதில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான போன்கள், ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதன் வாயிலாக, மூன்று லட்சம் பேருக்கு நேரடியாகவும், ஒன்பது லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.சர்வதேச நிறுவனங்களாக, 'ஆப்பிள், சாம்சங்' முதல், உள்நாட்டு நிறுவனங்களான 'லாவா, டிக்ஸன்' உள்ளிட்ட நிறுவனங்களின், 22 துணை உற்பத்தி நிறுவனங்கள், இத்திட்டத்தில் முதலீடு செய்ய, விண்ணப்பம் அளித்துள்ளன.அவர்களுக்கு வழங்கப்படும் அனுமதியின் அடிப்படையில், அந்நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை, இங்கு செய்ய உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X