இந்தியா

படேசாகிப் கோவில் பூசாரி மின்னல் தாக்கி பலி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கண்டமங்கலம் : சின்னபாபுசமுத்திரம் படேசாகிப் கோவில் பூசாரி மின்னல் தாக்கி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற படேசாகிப் ஜீவ சமாதி சித்தர்பீட கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரியான ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த முருகையன், 57; நேற்று மாலை தனது வீட்டில் வளர்த்து வரும் கறவை மாடுகளுக்கு, வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்தார்.மாலை 4:00 மணிக்கு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், முருகையன், அருகில் உள்ள ராமு என்பவர் நிலத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் ஒதுங்கி நின்றார்.அப்போது பலத்த சத்தத்துடன் வேப்பமரத்தின் மீது மின்னல் தாக்கியது.

அதில், மரத்தடியில் நின்ற பூசாரி முருகையன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். கண்டமங்கலம் போலீசார் விரைந்து சென்று, பூசாரி முருகையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இறந்த முருகையனுக்கு கற்பகம் என்ற மனைவியும், 5 மகள்களும் உள்ளனர். இவர்களில் 3 பேருக்கு திருமணமாகிவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X