ஆந்திராவிற்கு 3 தலைநகரங்கள் மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 ஆந்திராவிற்கு 3 தலைநகரங்கள் மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்

ஐதராபாத்; ஆந்திராவில், மூன்று தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவிற்கு, கவர்னர் பிஷ்வ பூஷன் ஹரிசந்தன் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. எதிர்ப்புதெலுங்கானா, தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆந்திராவின் தலைநகராக, அமராவதி என்ற நகரை உருவாக்க, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு, ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதும், அமராவதிக்கு உள்ள முக்கியத்துவத்தை குறைக்க முடிவு செய்து, மாநிலத்தில், மூன்று தலைநகரங்கள் இருக்கும் என, அறிவித்தார்.அதன்படி, அமராவதியை சட்டசபை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், கர்னுாலை நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கப்படும் என, அறிவித்தார்.

விசாகப்பட்டினத்தில், முதல்வர் மற்றும் கவர்னர் அலுவலகங்கள்; அமராவதியில், மாநில சட்டசபை; கர்னுாலில், உயர் நீதிமன்றத்தை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, தெலுங்கு தேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.தீர்மானம்இந்நிலையில், மூன்று தலைநகரங்களை உருவாக்கும் தீர்மானம், கடந்த ஜனவரியில், சட்டசபையில் நிறைவேறியது. சட்டமேலவையில், தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அந்த தீர்மானம் அங்கு தோல்வியடைந்தது.

இதையடுத்து, சட்டமேலவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த, 18ம் தேதி, மூன்று தலைநகரங்களை உருவாக்கும் மசோதா, மாநில கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு, கவர்னர் பிஷ்வ பூஷன் ஹரிசந்தன், நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் அளித்துள்ளார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்தில், கவர்னர் எடுத்துள்ள முடிவு, வரலாற்றுப் பிழையாகும்,” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X