கோர்ட் அவமதிப்பு சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி : 'கோர்ட் அவமதிப்பு சட்டம், பேச்சு சுதந்திரத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது; அதை ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கருத்து
கோர்ட் அவமதிப்பு சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி : 'கோர்ட் அவமதிப்பு சட்டம், பேச்சு சுதந்திரத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது; அதை ரத்து செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்திருந்தார். 'கடந்த, ஆறு ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதில், உச்ச நீதிமன்றத்துக்கும் பங்கு உள்ளது' என, அதில் அவர் தெரிவித்திருந்தார்.


latest tamil news
இதையடுத்து, பிரசாந்த் பூஷனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்நிலையில், பிரசாந்த் பூஷன், மூத்த பத்திரிகையாளர், என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு, நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பேச்சு சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் போன்றவை, தவறான நடவடிக்கை என்பது போல, அதில் கூறப்பட்டுள்ளது.

பேச்சு சுதந்திரத்தையும், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தையும், அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கொடுத்துள்ளது. ஆனால், அதை மீறும் வகையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு உள்ளது; இது, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்துக்கே எதிராக உள்ளது. இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, வரும், 4ல் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
02-ஆக-202012:28:32 IST Report Abuse
Sridhar என்ன இருந்தாலும் இவர்கள் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். தாங்கள் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லாமல், போகிற போக்கில் பொறுப்பற்றமுறையில் கருத்துக்களை சொல்லிவிட்டு, சட்டம் அதைக்கண்டு சீறும்போது, கொஞ்சம் கூட தங்கள் செயலுக்கு வெட்கப்படாமல், சிறிதேனும் பயம் இல்லாமல், சட்டத்தையே ஒரு கய் பாப்போம் என கிளம்பியிருக்கிறார்களே, இவர்களின் லட்சிய வெறியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
Rate this:
Cancel
02-ஆக-202009:41:59 IST Report Abuse
ஆரூர் ரங் கேஸ் போட்டுள்ள மூணு பேரும் மத்தியில் யார் ஆட்சி என்பதைப் பொறுத்து நியாயத்தை மாற்றும் பச்சோந்தி மனப்பான்மை உண்டு. எந்தத்தீர்ப்பாவது தான் எதிர்பார்த்ததுபோல இல்லையென்றால் நீதிபதியை நிதானமில்லாமல் திட்டுவது உள்நோக்கம் கற்பிப்பது பிரசாந்த் பூஷன். ராமின் நேர்மை உலகறிந்த கோயபல்ஸ் சீன ரகசியம். 1977 இல் எமெர்ஜென்சிக்கு ஆதரவு. 1980 இல் அதற்கு எதிர்ப்பு என மாறி மாறி உருட்டிய ஆள். ஜனநாயத்துக்குக் கெடு விளைவிப்பது மூவருமேதான் .
Rate this:
Cancel
Ranganathan - Doha,கத்தார்
02-ஆக-202009:40:34 IST Report Abuse
Ranganathan Yes. Judges are not from heaven. They are Vulnerable and many of their corrupt activities are hidden under this clause. Let us bring Judges under normal citizenship law. No special Status for them.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
02-ஆக-202012:22:00 IST Report Abuse
Sridharபொறுப்புள்ள மனிதர்களையும் உருவாக்கவேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X