தமிழ்நாடு

வேண்டாமே 'டிவி'யில் பாடங்கள் நடத்தும் நாட்களில் மின்தடை

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 வேண்டாமே   'டிவி'யில் பாடங்கள் நடத்தும் நாட்களில் மின்தடை

ஸ்ரீவில்லிபுத்துார்:கல்வி தொலைகாட்சியில் பள்ளி பாடங்கள் நடக்கும் நாட்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்வதால் மாணவர்கள் பாதிக்கிறார்கள். இதன் நாட்களை அறிந்து மின்துறையினர் மாற்றியமைக்க வேண்டும். அதேநேரத்தில் கல்விதுறையும் இதன் நாட்களை மின் துறைக்கு முறையாக அறிவிப்பதும் அவசியமாகிறது.

கொரோனா பரவலால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள்மூலம் புத்தகங்கள் வழங்கபட்டுள்ளது. அதேநேரம் கல்வி தொலைகாட்சியில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நிமிடத்திற்கு ஒரு பாடம் வீதம் கல்வி கற்பிக்கபட்டு வருகிறது.

இதை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கவனிக்கின்றனர். நேரடியாக பள்ளியில் படிப்பதுபோல் இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு பாடங்களின் அடிப்படை கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வேலை நாட்களில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் கல்வி தொலைகாட்சியில் பாடங்களை கற்பது தடைபடுவதால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.

சனி கிழமைக்கு மாற்றலாம்

நேரடி கல்விமுறை இல்லாமல் திணறும் மாணவர்கள் மின்தடையால் அன்றைய தின பாடங்களை பார்க்கமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை மின்வாரியம் கருத்தில் கொண்டு பராமரிப்பு நாட்களை சனிகிழமையில் மேற்கொள்ளவேண்டும்.

சீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்துார்................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X