தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு: முல்லைபெரியாறு கரை பகுதியில் விவசாய: ஆற்றின் அகலம் குறையும் அவலம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 ஆக்கிரமிப்பு: முல்லைபெரியாறு கரை பகுதியில் விவசாய: ஆற்றின் அகலம் குறையும் அவலம்

தேனி: முல்லைபெரியாறு ஆற்றின் கரை பகுதிகளில் விவசாய ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு குடிநீர், பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் துவங்கி கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி வழியாக செல்லும் முல்லைப் பெரியாற்றில் ஓடி வைகை ஆற்றில் கலந்து வைகை அணையைச் சேரும்.

அதிகபட்சமாக அணையில் திறக்கப்படும் 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் மட்டுமல்லாது தேனி மாவட்டத்தில் பெய்யும் மழை நீரும் சேர்ந்து செல்லும் வகையில் ஆற்றின் அகலம் இருந்தது. கரையோரத்தில் உள்ள விவசாயிகள் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து வாழை, தென்னை, இலமரம் விவசாயம் செய்வதால் லோயர்கேம்ப், கூடலுார், கம்பம் உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் அகலம் குறைந்துள்ளது.

இதுதவிர பல ஆண்டாக பொதுப்பணித்துறையினர் கரைப்பகுதியை சீரமைக்காமல் இருப்பதால் மரம், செடி கொடிகள் சூழ்ந்து தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கூடலுார் விவசாயி ஜெயபால் கூறுகையில்,'' பெரியாறு அணையில் மழைகுறைவால் 6 மாதங்களாக குறைவான தண்ணீரே முல்லைப்பெரியாற்றில் செல்கிறது. இதனைப் பயன்படுத்தி கரையோரப்பகுதியில் விவசாய ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன. அணையில் இருந்து கூடுதலாக திறக்கும் போது ஆற்றில் தண்ணீர் முறையாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு திசைமாறும். மிகவும் சுருங்கி கால்வாயாக மாறுவதற்குள் பொதுப்பணித்துறை யினர் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்பதே கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் கோரிக்கையாகும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X