பொது செய்தி

தமிழ்நாடு

ஆசை ...ஆசையாய் ஆடிப்பெருக்கு ...

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 ஆசை ...ஆசையாய் ஆடிப்பெருக்கு ...

இன்பங்கள் பெருக்கட்டும்

கடந்த பிப். 7ல் திருமணம் ஆகியது. இது எங்களுக்கு முதல் ஆடிப்பெருக்கு . கொரோனா காலம் என்பதால் சில நிகழ்ச்சிகளை சமூக இடைவெளியுடன் எளிதாக மேற்கொள்கிறோம். தாலி பிரித்து போடுதற்காக எங்களை அழைத்து விருந்து உபசரிப்புகளுடன் சிறப்பு செய்வர். இந்நன்னாளில் தாலி பிரித்து போடுவது பாக்கியம்.இந்த ஆடிப்பெருக்கில் துன்பங்கள் கரைந்து இன்பங்கள் ஆறுபோல் பெருகி ஓடும் என்பது எங்களது நம்பிக்கை.

விக்னேஷ்குமார், மலர்விழி தம்பதி, விருதுநகர்

கணவரின் ஆயுள் கூடும்

விவசாயத்தை வளப்படுத்த கூடிய நீர்நிலைகளை வணங்கும் விழா தான் ஆடி பெருக்கு. இன்று பெண்கள் புது தாலி கயிற்றை கடவுளை வணங்கி மாற்றி கொள்வதால் கணவரின் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. பகல் 12:00 மணிக்குள் தாலி மாற்றி கொள்வது நல்லது. ஏழை பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், புது சேலை போன்ற மங்களகரமான பொருட்கள் வாங்கி கொடுத்தால் செல்வம் பெருகும் என்பது ஜதீகம்.

ரோகிணி, குடும்பத்தலைவி,விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X