சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தர மறுத்த நண்பரை கொலை செய்தவர் கைது

Added : ஆக 02, 2020
Share
Advertisement

மரக்காணம் : குடி போதையில் பணம் கேட்டு தகராறு செய்து, நண்பரை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுதாகர், 39; அதே பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் சத்யநாராயணன், 38; நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், பூமிஸ்வரன் கோவில் அருகே மது குடித்தனர். அப்போது சுதாகரிடம், சத்யநாராயணன் கடனாக பணம் கேட்டுள்ளார். சுதாகர், பணம் இல்லை என கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த சத்யநாராயணன் தகராறு செய்தார். இதனால், இருவரும் தாக்கிக் கொண்டனர். அப்போது சத்யநாராயணன், வைத்திருந்த துண்டால் சுதாகரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

கொலை செய்யப்பட்ட சுதாகர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து சத்யநாராயணனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X