பெண் அடித்து கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் அடித்து கொலை

Added : ஆக 02, 2020
Share
திட்டக்குடி : தொழுதுார் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி, 42; இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.கணவர் இறந்த பின் கீழக்கல் பூண்டியில் உள்ள தனியார்

திட்டக்குடி : தொழுதுார் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த வடகராம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி கருப்பாயி, 42; இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.கணவர் இறந்த பின் கீழக்கல் பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தொழிலாளியாக கருப்பாயி பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை, மேலக்கல்பூண்டி ஏரிக்கரை அய்யனார் கோவில் அருகிலுள்ள கொட்டகையில், தலையில் காயத்துடன், அரை நிர்வாண கோலத்தில் கருப்பாயி இறந்து கிடந்தார். தகவலறிந்த டி.எஸ்.பி., இளங்கோவன் (பொறுப்பு), ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள், துப்பறியும் நாய் அர்ஜூன் வரவழைத்து தடயங்கள் சேகரித்தனர்

.கள்ளக்காதல் பிரச்னையா, கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X