சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் நேற்று இறந்ததால், பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,265 ஆக அதிகரித்துள்ளது. வெளி நாடு, வெளி மாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.டாக்டர்கள் 3, செவிலியர் 1, மருத்துவமனை ஊழியர்கள் 6, போலீஸ் 11, அரசு ஊழியர்கள் 3 பேர் என 24 பேருக்கு தொற்று உறுதியானது.நேற்று 56 பேர் குணமடைந்ததால், இது வரை 1,898 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட 1,145 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுவரை 49 ஆயிரத்து 658 பேருக்கு பரிசோதனை செய்ததில், 44 ஆயிரத்து 102 பேருக்கு தொற்று இல்லை. 2,291 பேருக்கு முடிவுகள் வர வேண்டும். 111 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் 60 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.நான்கு பேர் பலிமாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்கனவே 37 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று நான்கு பேர் இறந்தனர்.கடலுார் அரசு மருத்துவமனையில் 80 வயது நபர், 72 வயது நபர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 71 வயது பெண், 65 வயது நபர் இறந்தனர். இதனையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X