பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் மேலும் ஒரு கொரோனா சிறப்பு மையம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும், ஒரு கொரோனா சிறப்பு மையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டுக்குழு கூட்டம், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமை வகித்தார்.கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கோவை, 'கொடிசியா' வளாகத்தில் மேலும் ஒரு சிறப்பு மையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. கொடிசியா 'சி' ஹாலில் 300 படுக்கைகளுடன் இப்புதிய மையத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன், மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X