செய்திகள் சில வரிகளில்...திண்டுக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...திண்டுக்கல்

Added : ஆக 02, 2020
Share

வேடசந்துார்:இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆக.5ல் மாநில அளவிலான ஆர்பாட்டம் நடக்க உள்ளது.

அமைப்பின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் கூறியதாவது: 2019 ஜனவரியில் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைதான 6500 அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்கு 17(பி) குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டது. 17 மாதங்களாகியும்இதுவரை விலக்கப்படவில்லை. இதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற முடியாமல் தவிக்கின்றனர்.

பலமுறை முறையீடு செய்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி ஆக.5 ல் மாலை 5:00 மணிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பாக சமூக இடைவெளியுடன் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X