சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம், அதிகரிக்கும் தொற்று

Added : ஆக 02, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை 3,595 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 35 பேர் இறந்தனர். 934 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்டத்தில், நேற்று 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 3,923 ஆக உயர்ந்தது. கொரோனா முன்னெச்சரிக்கையாக 657 பேர் வீடு களில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதுவரை, நோயில் இருந்து குணமடைந்த 2,902 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் வங்கி பணியாளர் ஒருவர் இறந்தது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடாததால், இறப்பு எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 3,745 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தனர். இந்நிலையில், 675 பேருக்கு பரிசோதனை செய்ததில் 60 பேருக்கும்; சேலம் மாவட்டத்தில் வசிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் என, மொத்தம் 62 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,807 ஆக உயர்ந்தது. இதில், 2,743 பேர் குணமடைந்தனர். 25 பேர் இறந்தனர். மீதமுள்ள 1,039 பேரில் 949 பேருக்கு தொற்று அறிகுறி உள்ளது. 90 பேருக்கு இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X