பொது செய்தி

தமிழ்நாடு

புதிய தொழில்நுட்பத்தில் தேர்வு எழுதி சாதித்த மாணவிக்கு என்.எல்.சி., இயக்குநர் பரிசளிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

நெய்வேலி : தென்னிந்திய அளவில் முதன் முறையாக, 10ம் வகுப்பு மத்திய பாடத் திட்டத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் தேர்வு எழுதி நெய்வேலி மாற்றுத்திறனாளி மாணவி ஓவியா சாதனை படைத்தார். அவரை பாராட்டி என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் பரிசு வழங்கினார்.

கடலுார் மாவட்டம் என்.எல்.சி., நிறுவனத்தின் ஆதரவுடன் ஜவகர் கல்விக் கழகம், சி.பி.எஸ்.இ., பள்ளியை நடத்தி வருகிறது. இப்பள்ளியில், சிறப்புக் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி முறையில் பார்வை திறனற்ற மாணவி ஓவியா படித்தார்.இந்த ஆண்டு, மத்திய பாடத் திட்டத்தில் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, பிரத்யேகமாக வடிவமைத்த கம்ப்யூட்டர் உதவியுடன் எழுதினார். அதில் 500க்கு 447 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முதன்முறைஇதன் மூலம், சிறப்புக் குழந்தைகளால், முற்றிலும் தொழில் நுட்பத்தின் உதவியுடன் எழுதப்படும் தேர்வினை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தென் மண்டல அளவில் முதன் முறையாக எழுதியவர் என்ற பெருமையை ஓவியா பெற்றுள்ளார்.இவரது தாய் கோகிலா, தந்தை விஜயராஜ், இவர் என்.எல்.சி., கூடுதல் தலைமை மேலாளராகப் பணி புரிகிறார். சாதனை மாணவி ஓவியா, மேல் நிலைக் கல்வியை, கோயம் புத்துாரில் உள்ள ஒரு பள்ளியில், வணிகவியல் பிரிவில் தொடர உள்ளார்.பாராட்டு விழாஇம்மாணவியை கவுரவிக்கும் வகையில், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன், மாணவி ஓவியா விற்கு, ஜவகர் கல்வி கழகம் சார்பில் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்கினார்.

அவர் பேசுகையில், ' மாணவியின் சாதனையை நெய்வேலி நகரமும், என்.எல்.சி., நிறுவனமும் கொண்டாடி மகிழ்கிறது. தென்னிந்திய அளவில் மாணவி ஓவியா பதிவு செய்த சாதனை, நெய்வேலிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். அவரது கனவான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வாகி மாவட்ட கலெக்டராக பணியாற்ற வேண்டும் என்ற லட்சியம் நிறைவேற வேண்டும்' என்றார். மேலும், தனது பாராட்டுக் கடிதம் அடங்கிய ஒரு பட்டயத்தையும் மாணவிக்கு பரிசளித்தார்.விழாவில், என்.எல்.சி., நிறுவன கல்வி துறை தலை மைப் பொது மேலாளர் மோகன், பொது மேலாளர் வினாயகமூர்த்தி, ஜவகர் கல்வி கழக பொது செயலர் ஞானசம்மந்தம், ஜவகர் பள்ளிகளின் செயலர் மூர்த்தி, பள்ளி முதல்வர் யசோதா, மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.மேலும் தேர்வு முடிவுகள் வெளியானதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்கிரியால், மாணவியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X