தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் பணி ஜரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் பணி 'ஜரூர்'

Added : ஆக 02, 2020
Share
 தாவரவியல் பூங்காவில் 2வது சீசன் பணி 'ஜரூர்'

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்கா மூடப்பட்டு, 130 நாட்களாகியும், இரண்டாம் சீசனுக்காக, பராமரிப்பு பணியில், பூங்கா ஊழியர்கள் தளராமல் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி, சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக, 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நடப்பாண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மே மாதம் கோடை விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும்,'நீலகிரி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கான தடை தொடரும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பூங்கா விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில், இரண்டாவது சீசனுக்கான ஆயத்த பணிகள், முகப்பு புல்தரையை சீரமைக்கும் பணியில், தோட்டக்கலை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X