பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

ஊட்டி:ஊட்டி அருகே, பார்சன்ஸ்வேலி அணையில் தண்ணீர் குறைந்து வருவதால், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டம், பைக்காரா மின் வட்டத்திற்கு உட்பட்ட பார்சன்ஸ் வேலி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், மின் உற்பத்தி மேற்கொள்வதுடன், ஊட்டி நகருக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. வெலிங்டன் ராணுவ மையத்துக்கான குடிநீரும், இப்பகுதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டில், கோடை மழை, பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால், 58 அடிக்கு, 35 அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. வரும் நாட்களில், மழை, பொய்த்தால் மின் உற்பத்தி மற்றும் ஊட்டி மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்துக்கான குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202009:12:33 IST Report Abuse
Panduraangan நீலகிரி மாவட்டத்தில் நிறைய பெரும் கிராமங்களிலும் ஏரி தொடர்பு இல்லா கிராமங்களிலும் பல வருடங்களாக போதிய குடிநீர் வசதி இல்லை. கோடை காலங்களில் குடங்களை தூக்கிக்கொண்டு அலைவதும், லாரிகள் மூலம் குடிநீர் வாங்கியும் தேவையை பூர்த்தி செய்கிறார்கள். இவையெல்லாம் ஏன் நிர்வாக கவனத்திற்கு செல்வதில்லை.. நகராட்சியை பொறுத்தவரை எல்லா இடங்களும் குழாயை திறந்தவுடன் தண்ணீர் அது தடைபடும் போது பெரிதாக தெரிகிறது.. கிராமப்புறங்களில் இன்றும் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை 1 மணி நேரம் நீர்வரும் அவலங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X