பொது செய்தி

தமிழ்நாடு

விரைவாக கடனுதவி வங்கிகளுக்கு உத்தரவு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருப்பூர்:விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து, கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள் மீண்டு வந்தால்தான், பொருளாதார இழப்பீடுகளைச் சரிசெய்ய முடியும். வங்கிகள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாத காலத்துக்குள் குறியீட்டு இலக்கை முடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இந்தாண்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு வேளாண், தொழில், முன்னுரிமைத் துறையினருக்கான வழங்குவதற்கான கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து, கடன் இலக்கை எட்ட வேண்டும். அனைத்து வங்கிகளும், தங்களுக்கு வரும் கடன் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன்முடிவெடுத்து, பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடன் வழங்கப்பட்ட ஒரு வார காலத்துக்குள் அரசின் மானியங்கள், வங்கிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X