விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடத்த முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடத்த முடிவு

Added : ஆக 02, 2020
Share
திருப்பூர்:'விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும்' என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா காரணமாக, ஆக., 31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், முழு முதற்கடவுளின், விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. இந்த ஆண்டு கொரோனாவை விரட்டும்

திருப்பூர்:'விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும்' என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா காரணமாக, ஆக., 31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், முழு முதற்கடவுளின், விநாயகரின் சதுர்த்தி விழா வருகிறது. இந்த ஆண்டு கொரோனாவை விரட்டும் வகையில், விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை எளிய முறையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடனும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.விசர்ஜன விழா ஊர்வலம் இல்லாமல், சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து கொண்டாட வேண்டும். மக்கள் அவரவர் வீடுகளில் மஞ்சள் பிள்ளையாரை வைத்து விநாயகரை வழிபட்டு, மனமார பிரார்த்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X