பொது செய்தி

தமிழ்நாடு

பொருட்களை விற்பது பற்றி கவலைப்படாதீர்கள்!

Added : ஆக 02, 2020
Share
Advertisement
-சேதுராமன் சாத்தப்பன்-கொரோனாவை எப்படி ஒழிப்பது அல்லது படிப்படியாக குறைப்பது என்று, உலகம் முழுவதும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் யோசித்து வருகின்றனர். அவ்வகையில், பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி, ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். உருளை வடிவில் உள்ள, இந்த கருவிக்கு 'ஷைக்கோகேன்' என்று பெயரிட்டுள்ளார்.ஒரு அறைக்குள் இதை பொருத்தி விட்டால், அதிலிருந்து வெளியாகும்

-சேதுராமன் சாத்தப்பன்-கொரோனாவை எப்படி ஒழிப்பது அல்லது படிப்படியாக குறைப்பது என்று, உலகம் முழுவதும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் யோசித்து வருகின்றனர். அவ்வகையில், பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி, ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளார். உருளை வடிவில் உள்ள, இந்த கருவிக்கு 'ஷைக்கோகேன்' என்று பெயரிட்டுள்ளார்.ஒரு அறைக்குள் இதை பொருத்தி விட்டால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு, கொரோனா வைரஸில் பரவியிருக்கும் 'ஸ்பைக்' புரோட்டீனை நடுநிலையாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த 'ஸ்பைக்' புரோட்டீனை நடுநிலையாக்குவதால், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடிகிறது. கொரோனா வைரஸ் உள்ள ஒருவர் தும்மும்போதும், இருமும் போதும் பரவும் வைரஸ் கிருமிகளை, பெருமளவில் கட்டுப்படுத்துகிறது.கருவியை, அமெரிக்காவிலுள்ள யு.எஸ்.எப்.டி.ஏ., யூரோப்பியன் யூனியன் ஆகியவை அங்கீரித்துள்ளன. கருவியில் இருந்து வெளியேறும், எலக்ட்ரான் கதிர்கள், சுமார், 99.6 சதவீதம் கொரோனா வைரஸ் கிருமிகளை கொல்லும் ஆற்றல் படைத்தவை. விரைவில், அமெரிக்காவில் முதலில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். விபரங்களுக்கு: www.shreis.orgஓமன் நாட்டுக்கு ஏற்றுமதி இந்தியாவில் உள்ள பல ஏற்றுமதி வளர்ச்சி கழகங்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களை இணைக்கும் முகமாக, இணையவழி 'பிசினஸ் டூ பிசினஸ்' காணொளி கருத்தரங்கு நடத்தி வருகின்றன. அவ்வகையில், வரும், 12ம் தேதி ஒரு கருத்தரங்கு நடக்கிறது.ஓமன் நாட்டில் உள்ள இறக்குமதியாளர்களுடன் நடக்கயிருக்கும் இந்த 'பி2பி' மீட்டிங்கில், மெடிக்கல் மற்றும் சர்ஜிகல் எக்யூப்மென்ட், செராமிக்ஸ் அண்ட் கன்ஸ்டிரக் ஷன் பொருட்கள், எலக்ட்ரிக்கல் மிஷனரி அண்ட் எக்யூப்மெண்ட், விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருட்கள், பில்டிங் மெட்டீரியல்ஸ் ஆகியவை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடையலாம். rohittejpal@fieo.org, ashishjain@fieo.org என்ற இணையதளம் அல்லது 99596 - 71646 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.பொருட்களை எப்படி விற்பது?'ஸ்டார்ட் அப்' கம்பெனியில் உள்ள முக்கிய பிரச்னையே, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை எப்படி விற்பது என்பது தான். சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்யாத பல கம்பெனிகள், அடுத்த நிலைக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் தடுமாற்றம் அடைகிறது.அதுவும், இந்த கொரோனா காலத்தில், நேரடி மார்க்கெட்டிங் என்பது மிகவும் சிரமம். பொருட்களை விற்கும் நீங்கள், போய் பார்க்க தயாராக இருந்தாலும், பொருட்களை வாங்குவோர் தயாராக இல்லாததுதான் வருத்ததுக்குரிய விஷயம்.அதை போக்கும் வகையில், உலகளவில் உள்ள ஆயிரக்கணக்கான வாங்குபவர்களிடமும், 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமும் காண்பிக்க, ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. Native Lead Foundation என்கிற அமைப்பு இந்த வசதியை உங்களுக்கு செய்து கொடுக்கிறது. ஆக., 7 மற்றும் 8ல் நடக்கும் இணையவழி மெய்நிகர் கண்காட்சியில், நீங்கள் ஸ்டால் அமைக்கலாம். https://tinyurl.com/vexpo20.சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappangmail.com, www.start up business news.com. மொபைல் எண்: 98204-51259.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X