பணிமனை வரும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்க முடிவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணிமனை வரும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்க முடிவு 

Added : ஆக 02, 2020
Share

திருப்பூர்:நிலுவையில் இருந்த, 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதால், போக்குவரத்து பணிமனைக்கு வரும்தொழில்நுட்ப பணியாளர், ஊழியர் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மே மாதம் மண்டலத்துக்குள், பஸ் இயக்கப்பட்ட போது, டிப்போ அலுவலகத்துக்கு அதிகாரிகள், அலுவலர்கள், தொழில்நுட்ப பணியாளர், டிரைவர், நடத்துனர், ஊழியர்கள் என, 50 பேர் தினமும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர்.கடந்த, 60 நாட்களாக பஸ்கள் முழுமையாக இயங்கவில்லை. பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களின், 'கன்டிஷன்' அறிய, சுழற்சி முறையில் டிரைவர், தொழில்நுட்ப பணியாளர், 30 பேர் மட்டுமே பணிக்கு வரவழைக்கப்படுகின்றனர். தற்போது, ஆக., 31 வரை பஸ் இயக்கமில்லை என அரசு அறிவித்துள்ளது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,'டிப்போவில் நிலுவையில் உள்ள பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்று விட்டதால், புதிய வேலை இல்லை. இதனால், தொழில்நுட்ப பணியாளர், ஊழியர் மட்டுமே போதும் என்பதால், பணியாளர் வருகை ஆக., முதல் வாரத்தில் மேலும் குறைக்கப்படும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X