விதிமீறி சாலைப்பணி இயந்திரங்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறி சாலைப்பணி இயந்திரங்கள் பறிமுதல்

Added : ஆக 02, 2020
Share
குன்னுார்:குன்னுார் சந்திரா காலனியில், விதிகளை மீறி, மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை அழித்து சாலை அமைத்ததால், 'பொக்லைன்' பறிமுதல் செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், நிலச்சரிவு அபாயம் உள்ளதால், பொக்லைன் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி, மலைப்பகுதியை குடைய தடை உள்ளது.எனினும், மறைமுகமாக பலர், மலைப்பகுதியில் சாலை அமைப்பதும், பிரம்மாண்ட கட்டடங்கள் கட்டுவதும்
 விதிமீறி சாலைப்பணி இயந்திரங்கள் பறிமுதல்

குன்னுார்:குன்னுார் சந்திரா காலனியில், விதிகளை மீறி, மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தை அழித்து சாலை அமைத்ததால், 'பொக்லைன்' பறிமுதல் செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், நிலச்சரிவு அபாயம் உள்ளதால், பொக்லைன் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி, மலைப்பகுதியை குடைய தடை உள்ளது.எனினும், மறைமுகமாக பலர், மலைப்பகுதியில் சாலை அமைப்பதும், பிரம்மாண்ட கட்டடங்கள் கட்டுவதும் அதிகரித்து வருகிறது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட சந்திரா காலனியில், அனுமதியில்லாமல், மலைப்பகுதியில் சாலைப்பணிகளை செய்துள்ளனர்.இது குறித்த புகாரில், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் உத்தரவின்படி, வருவாய் ஆய்வாளர் கோபி தலைமையில், வருவாய்துறையினர் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். தோட்ட உரிமையாளரிடம் விசாரணை நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X