நான் மாஸ்க் அணியனும்னா ஊழல் ஒழியனும்: மெக்சிகோ அதிபர் அதிரடி

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

மெக்சிகோசிட்டி: ஊழல் ஒழிந்தால்தான் நான் மாஸ்க் அணிவேன் என மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேடர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.



latest tamil news



நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருக்க சமூக விலகல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கடைபிடித்து வருகின்றன.
இந்நிலையில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேடர், நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே தான் முகக்கவசம் அணிவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “நாம் ஒரு ஒப்பந்தம் போடுவோம். இந்த நாட்டில் ஊழல் விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் மாஸ்க் அணிவேன். பொருளாதாரம் மேம்பட மாஸ்க் ஒரு காரணமாக இருந்தால் அதை உடனே அணியவும் தயாராக இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



கொரோனா நோய்த் தொற்று காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப், முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்தார். ஆனால் தொடர்ந்து வந்த விமர்சனம் காரணமாக டிரம்ப் முகக்கவசம் அணியத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-202009:17:39 IST Report Abuse
Chinnappa Pothiraj நம்நாடு‌ எல்லோருக்கும் பொது சிவில் சட்டம் மற்றும் ஒரு குடும்பம் ஒரு வாரிசு என்ற சட்டங்கள் அமல்படுத்த வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுவிட்டது. மேலும் அரசியல்வாதிகள் சபதம் ஏற்பார்களா ஊழல்கள் இல்லா அரசு ஊழல் நிரூபிக்கப்பட்டால் அதற்குண்டான தண்டணை மும் சபதமேற்பார்களா? வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
02-ஆக-202009:11:26 IST Report Abuse
Muguntharajan இப்படி பேச இங்க இருக்கிற நம்ம அரசியல்வியாதிகளுக்கு தைரியம் இருக்கா?
Rate this:
Cancel
02-ஆக-202007:49:28 IST Report Abuse
ஆப்பு இங்கே வறுமையை ஒழிப்போம்னு சபதம். அல்லார்க்கும் வூடு சபதம். 2 கோடி வேலை சபதம். ஆளுக்கு 15 லட்சம் சபதம்... இதையெல்லாம் பாத்துட்டு அவரும் சபதம் உட ஆரம்பிச்சுட்டாரு. மக்கள் எல்லா ஊரிலேயும் ஒண்ணுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X