திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை மொத்தம் 13,779 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். கடந்த ஒரு நாளில் மட்டும் 752 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். 10,862 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் இதுவரை 13,779 பேர் மீண்டுள்ளதால் அங்கு கொரோனா மீட்பு விகிதம் 56 சதவீதமாக உள்ளது.

இருப்பினும் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,741 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பு ஏற்பட்டவர்களில் வெளிநாடுகளில் இருந்து 89 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து 114 பேரும் வந்துள்ளனர். 880 பேருக்கு நோயாளிகளின் தொடர்பின் மூலம் தொற்று ஏற்பட்டது. 58 பேருக்கு தொற்று யார் மூலமாக ஏற்பட்டது என்பது கண்டறியப்படவில்லை.
அதிகபட்சமாக நேற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் 259 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 153 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 141 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 95 பேருக்கும், பத்தனம்திட்டாவில் 85 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 76 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 67 பேருக்கும், , கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தலா 47 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 59 பேருக்கும், வயநாடு மற்றும் கொல்லம் மாவட்டத்தில் தலா 35 பேருக்கும், இடுக்கியில் 14 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 5 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் 1,43,996 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 20,518 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. மாநிலத்தில் தற்போது மொத்தம் 492 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE