பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கு வழிபாடு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 ஊரடங்கால் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கு வழிபாடு

திண்டுக்கல்:ஆடிமாதத்தின் சிறப்பு நாளான ஆடிப்பெருக்கில், ஊரடங்கு காரணமாக பொது மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

ஆடிமாதத்தின் 18 ம் நாளான ஆடிப்பெருக்கில் விவசாயிகள் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். பெண்கள் திருமணமாகவும், மாங்கல்யம் நிலைக்கவும் மஞ்சள் அணிந்து வழி படுவர். திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு அணைப்பட்டி, பழநி சண்முகநதி போன்ற ஆறுகள் ஓடும் பகுதிகளில் வழிபாடு நடத்தி நல்ல பணிகளை துவக்குவர். இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\
அலைமோதிய கூட்டம்

இன்று ஆடிப்பெருக்கு நாளையொட்டி, நேற்றே மார்க்கெட்கள், வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் நின்று வாங்கினர்.

பழநி கவிதா கூறியதாவது: ஆண்டுதோறும் முளைப்பாரி எடுத்து குலதெய்வத்தை வழிபட்டு ஆற்றில் கரைப்போம். இந்தாண்டு வீட்டிலிருந்தே வழிபட முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

பழநி மதனபுரம் எஸ்.ஆனந்தி கூறியதாவது: ஆடி 18 அன்று திருமூர்த்திமலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து குலதெய்வம் வீரமாத்தி அம்மனை வழிபடுவோம். இதற்காக பங்காளிகளுடன் திருப்பூர் மாவட்டம் கொங்கலகுறிச்சி செல்வோம். இந்தாண்டு ஊரடங்கால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை. தற்போது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோயில் வழிபாடு நடந்தால் தான் வருமானம் மேம்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X