ஆடிப்பெருக்கை முன்னிட்டுபூ விலை கடும் உயர்வு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஆடிபெருக்கை முன்னிட்டு கிலோ ரூ.80 க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று ரூ.1000 க்கு விற்பனையானது

திண்டுக்கல்லில் கொரோனா காரணமாக பூ மார்கெட் மூடப்பட்டு தற்காலிகமாக பஸ் ஸ்டாண்டிற்கு எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. கொரோனா ஊரடங்கால், வெளி மாவட்டம், மாநிலங்களுக்குச் செல்லாமலும், விழாக்கள் இல்லாததாலும் 4 மாதங்களாக பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்திருந்தது.

இந்நிலையில் ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடிப்பெருக்கு என அடுத்தடுத்து விழாக்கள் வந்ததால் பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கிலோ ரூ.80 க்கு விற்ற மல்லிகை பூ ரூ.1000 க்கும், ரூ.100 க்கு விற்ற முல்லைப் பூ ரூ.450 க்கும், ரூ.10 க்கு விற்ற சம்பங்கி ரூ.150 க்கும், அரளி ரூ.150, ரோஸ் ரூ.200, ஜாதிப்பூ ரூ.400, கனகாம்பரம் ரூ.350 க்கும் விற்பனை ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X