தமிழ்நாடு

அதிகரிப்பு குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது 3 ஆண்டுகளில் 15 சதவீதமாக இருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் சிறுவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் விசாரிக்க தனிநீதிமன்றம், சிறை மட்டுமின்றி, போலீசார் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால்தானோ என்னவோ குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது 3 ஆண்டுகளில் 15 சதவீதமாக இருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் ஈடுபடுவது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பழநியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 18 வயதுக்கு குறைவான 6 பேர் குற்றவாளிகள். இரு நாட்களுக்கு முன் திண்டுக்கல் நகரில் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததிலும் 13, 12 வயதுள்ள 4 சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுபோல அலைபேசி, நகை திருட்டுகளிலும் ஈடுபடுகின்றனர்.

ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் விடுப்பில் உள்ளது. மாணவர்கள் இணைய மோகத்தில் மூழ்கியுள்ளனர். இது குற்றங்களுக்கு காரணமோ என போலீசார் கருதுகின்றனர்.

அரசு மனநல மருத்துவர் டீன் வெஸ்லி கூறியதாவது: சிறு வயதில் புறக்கணிக்கப்படுவது, தவறான வழிகளில் பயணிப்பது காரணம் எனலாம். சண்டை போடுவது, திருடுவது, முரட்டுத்தனமாக நடப்பது, மிருகங்களை கொல்வது போன்ற செயல்கள் இதன் அறிகுறிகளாக வெளிப்படும்.

பெற்றோர், ஆசிரியர்கள் அவர்களை இறை நம்பிக்கையோடு வளர்க்க வேண்டும். படிக்கவில்லை என்றாலும், பிடித்த திசையில் பயணிக்க வழிசெய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X