பொது செய்தி

இந்தியா

புதிய கல்வி கொள்கையில் சீன மொழி நீக்கம்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதிய கல்வி கொள்கையில் சீன மொழி நீக்கம்


துடில்லி :புதிய கல்வி கொள்கையில், விருப்ப மொழி பட்டியலில் இருந்து, சீனாவின் மாண்டரின் மொழி, அதிரடியாக நீக்கப்பட்டுஉள்ளது.

நாடு முழுதும் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கையை, மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதில், வெளிநாட்டு விருப்ப மொழி தேர்வு பட்டியலில், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஸ், ஜப்பானிஸ், சீனாவின் மாண்டரின் உள்ளிட்ட பல மொழிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.


latest tamil news




இதில், விருப்ப மொழி பட்டியலில், கொரியன், ரஷ்யன், போர்த்துகீஸ் உள்ளிட்ட மொழிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. ஆனால், வரைவு பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த, சீனாவின் மாண்டரின் மொழி இடம்பெறவில்லை. அது குறித்து, எந்த விளக்கமும் இதில் இடம்பெறவில்லை.

சமீபத்தில், லடாக் அருகே, சீன எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, விருப்ப மொழி பட்டியலில் இருந்து மாண்டரின் மொழி நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தாலும், மத்திய அரசு தரப்பிலிருந்து, இது தொடர்பாக எந்த விளக்கமும் தரப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
02-ஆக-202014:31:37 IST Report Abuse
s.rajagopalan நல்ல முடிவு .. அந்த மொழியை கற்று நமக்கு நல்லது ஏதாவது செய்வாய்ங்களா ? உளவு பார்க்க பயன்படுத்துவாங்க.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
02-ஆக-202011:30:22 IST Report Abuse
konanki எங்க தலீவருங்கோ அவங்க ஸ்கோல் ல ஆளுக்கு்எக்ஸ்டராவா ஓரு லட்சம்்ரூபாய்்பீஸ் வாங்கி் மாண்டிரின் கத்து தந்து கல்லா கட்டுவாங்க . யார் கிட்டே ? தமிழன்டா
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
02-ஆக-202011:26:44 IST Report Abuse
konanki ஓ அதனால் தான் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் விசிக கட்சிகள் புதிய கல்வி கொள்கையை எதிர்க்குதா?
Rate this:
kathiresan - Chengalpattu,யுனைடெட் கிங்டம்
02-ஆக-202019:48:31 IST Report Abuse
kathiresanWell said...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X