பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் காக்கும் முருகன் முகம் உடல் நலம் காக்கும் வேல்: சொற்பொழிவாளர் சண்முகதிருக்குமரன் பேச்சு

Added : ஆக 02, 2020
Share
Advertisement



மதுரை, மதுரையில் ஆன்மிக சொற்பொழிவாளர் சண்முகதிருக்குமரன் நடுவராக பங்கேற்ற 'கந்தர் சஷ்டி கவசம் வலியுறுத்துவது மன நலமா, உடல்நலமா' என்ற தலைப்பில் இணையவழி பட்டிமன்றம் நடந்தது.மனநலம் அணியில் முத்துராமலிங்கம், வைஜெயந்தி மாலா, பத்மா, உடல் நலம் அணியில் முருகன், வள்ளியம்மை, அழகுமணி வாதங்களை முன்வைக்க சண்முகதிருக்குமரன் பேசியதாவது: மந்திர அதிர்வுள்ள கந்தர் சஷ்டி பாடலின் சொற்கள் நோய் தீர்க்கும் அற்புதம் செய்கிறது. மனம், உடலுக்குள் ஊடுருவி நேர் மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. 'கவசம்' என்றால் உடலை பாதுகாப்பது எனபொருள்பட அறிவியல்பூர்வமாக இயற்றியபாடல். பாடல் வரிகளில் சில ஒற்றை, இரட்டைப்படை எண் வரிசையில் இருப்பதால் பேச்சாற்றல் குறைந்த குழந்தைகள் பாடினால் மூளைதிறன் அதிகரித்து தெளிவாக பேசுவர்.'சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை' என்பர். 'சரம் என்றால் மூச்சு. சரத்தை வயப்படுத்தி காலனை வென்று கடவுளை காணலாம் என்பதால் தான் முருகனுக்கு சரவணன் என பெயர் உண்டு' என்கிறார் தேவராயர் சுவாமி. 'சரவண பவ' என்ற வார்த்தையில் 'பவ' என்றால் காப்பாற்றுபவன் என பொருள்.உடலின் ஒற்றை பாகங்களான நெற்றி, தொண்டை, மார்பு, தொப்புள், மலக்குழி, ஆண், பெண் குறிகள் என்ற ஆறு ஆதாரங்களை தான் வட்ட குதத்தை வடிவேல் காக்க என பாடல் கூறுகிறது. எனவே முருகன் முகம் மனநலத்தையும், வேல் உடல் நலத்தையும் காக்கிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X