பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து: * மாநகராட்சி வழங்குகிறது

Added : ஆக 02, 2020
Share
Advertisement


மதுரை, மதுரை மாநகராட்சியில் இரண்டாவது சுற்றாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது.கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை மாநகராட்சி வழங்கியது. ஒரு லட்சம் பேருக்கு வைட்டமின் சி, ஜிங், ஆர்சனிக் ஆல்பம், கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு குறைந்த விலையில் வழங்கும் பணி தொடர்கிறது.இப்போது 2வது சுற்று மருந்துகள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. வரையறுக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. 4 மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் இப்பணி நடக்கிறது. முதலாவது மண்டலம் விராட்டிபத்தில் நேற்று துவங்கப்பட்டது. சுகாதார அலுவலர் விஜயகுமார் கூறுகையில், 'முதலாவது மண்டலத்தில் 25 ஆயிரம் பேர் பயன்பெறுவர். 50 கிராம் கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்குகிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X