சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கேபிள் 'டிவி' சேனல் நிர்வாகி கடத்தல்மதுரை: பைகாரா முத்துராமலிங்கபுரம் ஜெயராஜ். கேபிள் 'டிவி' சேனல் நடத்தி வருகிறார். எல்லீஸ்நகரில் உள்ள இவரது அலுவலகத்திற்கு வந்த ஜெயராம் உட்பட சிலர் ரூ.10 லட்சம் கேட்டு காரில் கடத்தினர். கொடுக்கல், வாங்கல் தொடர்பாக நடந்திருக்கலாம் என எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.கொரோனா பயத்தில் தற்கொலைமதுரை: உச்சபரம்புமேடு மூர்த்திராஜன் 52. திருமணம் ஆகாதவர். சில நாட்களாக கொரோனா பயத்தில் இருந்தவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் சாவில் மர்மம்மதுரை: கிருஷ்ணாபுரம் காலனி சொக்கநாதபுரம் மாரீஸ்வரன். இவரது மனைவி கவுசல்யா 21. திருமணமாகி 4 ஆண்டுகளாகின்றன. நேற்றுமுன்தினம் உடல்நலம் பாதித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சாவில் மர்மம் இருப்பதாக தாயார் சங்கரேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.மூவர் மீது கந்துவட்டி வழக்குமதுரை: உத்தங்குடி பத்மினி 42. இவர் ஆனந்தலட்சுமியிடம் வட்டிக்கு கடன் வாங்கினார். ரூ.48 ஆயிரம் செலுத்திய நிலையில், ரூ.57 ஆயிரம் செலுத்த வேண்டும் என மிரட்டியதாக மூவர் மீது புதுார் போலீசார் கந்துவட்டி வழக்குப்பதிவு செய்தனர்.10 பவுன் நகை பறிப்புமதுரை: அவனியாபுரம் பெரியசாமிநகர் செல்வம் மனைவி பேச்சிசெல்வம் 50. நேற்றுமுன்தினம் இரவு திருப்பரங்குன்றம் ரோட்டில் கணவருடன் டூவீலரில் வந்தபோது, டூவீலரில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் பத்து பவுன் செயினை பறித்துச்சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.நகை பறிப்புதிருநகர்: ஜோசப் நகர் ஆதிராஜன் 43. நேற்று முன்தினம் இரவு விளாச்சேரி மெயின் ரோட்டில் வாக்கிங் சென்றார். டூவீலரில் வந்த 2 பேர், மூன்று பவுன் நகையை பறித்து சென்றனர். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.வியாபாரி பலிமேலுார்: கரையிப்பட்டி வைக்கோல் வியாபாரி முத்துவேல்பிரபு 35. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் திருப்பத்துாரில் இருந்து சொந்த ஊருக்குதிரும்பினார். ெஹல்மெட் அணியவில்லை. கீழவளவு புறாக்கூடு மலை பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார். கீழவளவுபோலீசார் விசாரிக்கின்றனர்.மதுவிற்றவர் கைதுவிக்கிரமங்கலம்: எஸ்.ஐ., வெற்றிவேல் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். உசிலம்பட்டி ரோட்டில் பெட்டிகடையில் வைத்து மதுவிற்ற பாண்டியை 48, கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.முகக்கவசம் அணியாதோர் கைதுமதுரை: திடீர்நகர் சிக்கந்தர் பாட்ஷா 336, முத்துபாண்டி 25. இருவரும் அரசின் எச்சரிக்கையை மீறி முகக்கவசமின்றி வலம் வந்ததாக போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X