தமிழ்நாடு

பணம் பெற்று கொண்டு இ பாஸ் வழங்கலா அதிகாரிகள் விசாரணை

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 பணம் பெற்று கொண்டு இ பாஸ் வழங்கலா  அதிகாரிகள் விசாரணை

மதுரை மதுரையில் பணம் பெற்று கொண்டு சென்னை, கோவைக்கு இ பாஸ்வழங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.ஊரடங்கால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சைக்கு ஆதார் கார்டு, வாகன எண், தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே ஆன்லைன் மூலம் இ பாஸ் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் நிராகரிக்கப்படுவதும் உண்டு. ஆனால் சில தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர் பணம் பெற்று இ பாஸ் வழங்குவதாக தகவல் வெளியானது.மதுரை புதுவிளாங்குடியில் டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்த மளிகை கடை ஒன்றில் பணம் பெற்று கொண்டு இ பாஸ் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. சென்னைக்கு ரூ.4000, கோவைக்கு ரூ.2500 வரை பெற்றுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்ட நிர்வாகம் தான் அனுமதி தர வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். முறையான காரணங்கள் தவிர தவறு நடந்தது தெரிய வந்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X