தமிழ்நாடு

'அம்மா' சிமென்ட் தட்டுப்பாடு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

மதுரை, மதுரையில் 'அம்மா' சிமென்ட் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலம் நகர் பகுதிக்கும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் புறநகர் பகுதிக்கும் 'அம்மா' சிமென்ட் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கால் சிமென்ட் ஆலைகள் சரிவர இயங்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளி சந்தையில் ஒரு மூடை ரூ.400 வரை விற்கப்படுகிறது.ஒப்பந்தக்காரர்கள், கட்டுமான தொழிலாளர்கள் கூறியதாவது: 'அம்மா' சிமென்ட் ரூ.190க்கு கிடைக்கிறது. அரசு மானியத்துடன் கட்டப்படும் வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். பல கோடி ரூபாய் மதிப்பில் அரசு கட்டுமான பணிகள் நடக்கின்றன. ஆனால் தேவையான அளவு சிமென்ட் கிடைக்காததால் ஒப்பந்த பணிகளை முடிக்க முடியவில்லை. கட்டுமான தொழிலாளர்களும் பாதிக்கின்றனர். தட்டுப்பாடின்றி சிமென்ட் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X