எனக்கு எதுவும் ஆகாது' :மன தைரியத்தால் கொரோனாவிருந்து மீண்ட 100 வயது பாட்டி

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
எனக்கு எதுவும் ஆகாது' :மன தைரியம் கொரோனாமீண்ட 100 வயது பாட்டி

சென்னை;மன தைரியத்துடன், தினமும் சத்தான உணவு வகைகளை சாப்பிட்டால், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விடலாம் என, 100 வயது மூதாட்டி வேலாயம்மாள் நிரூபித்து உள்ளார்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலாயம்மாள், தற்போது, சென்னை, மந்தைவெளியில் டாக்டர் மகனுடன் வசிக்கிறார். அவர், சாந்தோமில் கிளினிக் வைத்து உள்ளார். டாக்டருக்கு சமீபத்தில் தொற்று பாதித்தது.தொடர்ந்து, அவரின் மனைவி, மகள் மற்றும் தாய் வேலாயம்மாள் என, அனைவருக்கும் தொற்று உறுதியானது. அனைவரும் உரிய சிகிச்சை எடுத்ததால், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.

இது குறித்து, வேலாயம்மாளின் மருமகள் தேவகி கூறியதாவது:ஒரு நாள் மாத்திரை எடுத்ததும், எங்களுக்கு காய்ச்சல் குறைந்து, உடல்நிலை சீரானது. மாமியாருக்கு காய்ச்சல் குறையாததால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றோம்.அவர், அங்கு தங்க விரும்பவில்லை. வீட்டிற்கு அழைத்து வந்து, டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை வழங்கினோம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிறு வயது முதல், அதிக வேலைகளை செய்வார்.

அவருக்கு, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் இல்லை.மருந்துகள் சாப்பிடுவது மட்டுமின்றி, தினமும் இரண்டு முறை, உப்பு தண்ணீரால் வாய் கொப்பளித்தார்; ஆவி பிடித்தார். தினமும் ஒரு முட்டை கொடுக்கிறோம்; நெல்லிக்காய், இஞ்சி சாறும் வழங்குகிறோம்.மருந்து சாப்பிடுவதால், வயிற்றில் புண் ஏற்படக்கூடாது என்பதற்காக, வெறும் வயிற்றில், காலையில் பூசணி சாறு வழங்கினோம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, அவரின் உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதையும் கண்காணித்தோம்.அவரை மருத்துவமனைக்கு அழைத்தால், 'எனக்கு எதுவும் ஆகாது' என, அடிக்கடி கூறுவார்.

அவர், தற்போது தொற்றில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளார்.தொற்றில் இருந்து குணமடைய, அவரின் மன தைரியமே காரணம். கொரோனா பாதிப்பு வந்தால், யாரும் பீதி அடைய வேண்டாம். டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரை, சத்தான உணவு சாப்பிட்டால், நோயில் இருந்து மீண்டு விடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202008:29:29 IST Report Abuse
SAPERE AUDE இது ஓர் நல்ல செய்தி. இந்த தாயார் கூறுவதே உண்மை. ஆண்டவன் இவருக்கு நீண்ட ஆயுளை அளிக்க வேண்டுவோம்.சரியான கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து வந்தால் இயற்கையே உடற்கூறுகளை சரியக கவனித்துக்கொள்ளும். மருந்துகள் உடலில் கிருமிகளை அழிக்க உதவும்.நமது உடலில் இயர்கை அளிக்கும் நோய் எதிர்க்கும் சக்திதான் நோய்த் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X