நகராட்சி பெண்கள் கழிப்பறை சுத்தம் செய்த ம.பி., அமைச்சர்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
நகராட்சி பெண்கள் கழிப்பறை சுத்தம் செய்த ம.பி., அமைச்சர்

குவாலியர் :ம.பி.,யில், நகராட்சி அலுவலக பெண்கள் கழிப்பறையை, சுத்தம் செய்யும் பணிகளை, அம்மாநில அமைச்சர், பிரதியுமான் சிங் தோமர் மேற்கொண்டார்.ம.பி.,யில், முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில எரிசக்தி துறை அமைச்சர், பிரதியுமான் சிங் தோமர், நேற்று, குவாலியரில் உள்ள நகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார்.


latest tamil news




அவரிடம், சில பெண் ஊழியர்கள், அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருப்பதாக புகார் கூறினர். அந்த கழிப்பறையை பார்வையிட்ட அமைச்சர் பிரதியுமான் சிங், அதை சுத்தம் செய்வதற்கான பொருட்களை தரும்படி, அதிகாரிகளிடம் கேட்டார். அவைகளை வைத்து அமைச்சர் கழிப்பறையை சுத்தம் செய்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
02-ஆக-202016:20:26 IST Report Abuse
vnatarajan இது ரொம்ப ஓவரா தெரியறது . இவரே இப்படி எல்லா கழிப்பறையையும் சுத்தம் செய்ய முடியுமா. இவர் என்ன செய்திருக்கவேண்டுமென்றால் கழிப்பறையை தினம் சுத்தம் செய்ப்பவரை அழைத்து தேவையான பொருள்களை வாங்கிக்கொடுத்து திதினம் சுத்தமாக வைத்திருக்க செய்திருக்கவேண்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஆக-202011:08:45 IST Report Abuse
S. Narayanan எல்லாம் ஓட்ட குறிவச்சு செய்யும் நாடகம்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
02-ஆக-202009:29:46 IST Report Abuse
Balasubramanian Ramanathan யோவ். இந்த ஊருக்கு வாங்க்கையா. எங்க எதிர் கட்சி தலைவர் பேண்ட் ஷர்ட்டோடு கரும்பு காட்டில் மண்வெட்டி பிடித்து வேலை செய்து அவரூம் விவசாயி என எங்களை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X