பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் பூமி பூஜை விழா: அத்வானி ஜோஷிக்கு அழைப்பு இல்லை

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள மூத்த பா.ஜ., தலைவர் அத்வானி, மற்றும் முரளிமனோகர் ஜோஷி ஆகியோரை அழைக்கப்பட வில்லை.



latest tamil news



அயோத்தியில் வரும் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கடந்த 1990 ம் ஆண்டில் அயோத்தியில் ராமர் கோவில்கட்டும் இயக்கத்திற்கு அத்வானி தலைமை தாங்கினார் .தொடர்ந்து 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இது குறித்தவழக்கில் சிபிஐ நடத்தி வரும் வழக்கு விசாரணையின் போது கடந்த வாரம் அத்வானி , மற்றும் முரளிமனோகர் ஜோஷி வீடியோ மூலம் கலந்து கொண்டனர். இவர்கள் மீது வழக்கு விசாரணை இருப்பதால் அழைப்பு அனுப்ப வில்லை என கூறப்படுகிறது.அதே நேரத்தில் முன்னாள் மத்தியஅமைச்சர் உமா பாரதி மற்றும் உ.பி.,மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படட்டுள்ளது.

தொடர்ந்து அழைப்புஅனுப்பப்பபடாத தலைவர்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநில முதல்வர்உத்தவ்தாக்கரே இடம் பிடித்துள்ளார்.


latest tamil news



அவர் இது ஒரு சாதாரண கோயில் அல்ல. நாம் இன்று கொரோனாவுடன் போராடி வருகிறோம். மத கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டடுள்ளன. விழாவிற்கு நான் அயோத்தி செல்லலாம். ஆனால் ராம் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வருவர். அவர்களை நீங்கள் தடுப்பீர்களா என வே பூமி பூஜையை வீடியோ மாநாடு மூலம் நடத்தலாம் என கருத்து தெரிவித்து இருந்தார்.

உத்தவ் தாக்கரேவின் இந்த கருத்துக்கு விஎச்பி கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாகவே உத்தவ்விற்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்ற பின்னர் 100 வது நாள் கொண்டாடும் வகையில் அயோத்தி சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனது கட்சி ரத்தமும் வியர்வையும் கொடுத்துள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

அழைப்பு விடுக்கப்படாத பட்டியில் மற்றொரு தலைவராக பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெயரும் இடம்பிடித்துள்ளது. இவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் பீகார்மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றிபெற முஸ்லீம் ஆதரவை பெறுவதாக இந்து அமைப்புகள் கருதுகின்றன. அதன்அடிப்படையில் இது வரையில்அழைப்பு அனுப்பவில்லை .இருப்பினும் கடைசி நேரத்தில் அவர் விழாவில்கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு வி.ஐ.பி.க்கள் 50 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மொத்தமாக 200 பேர் வரையில் விழாவில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202009:23:22 IST Report Abuse
ஆரூர் ரங் மிகவும் வயதானவர்களுக்கு அழைப்பனுப்பாமல் இருப்பதே நல்லது
Rate this:
Cancel
02-ஆக-202009:23:40 IST Report Abuse
ஆரூர் ரங் மிகவும் வயதானவர்களுக்கு அழைப்பனுப்பாமல் இருப்பதே நல்லது
Rate this:
Cancel
02-ஆக-202009:23:33 IST Report Abuse
ஆரூர் ரங் மிகவும் வயதானவர்களுக்கு அழைப்பனுப்பாமல் இருப்பதே நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X