பொது செய்தி

தமிழ்நாடு

சாஸ்த்ரா பல்கலை பட்டியல் வெளியீடு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை : தஞ்சாவூரில் உள்ள, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலையின், 2020 - -21ம் ஆண்டிற்கான, சட்டம், பொறியியல் படிப்புகளின், மாணவர் சேர்க்கைக்கான, தர வரிசைப் பட்டியல் வெளியிட, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி வரை மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து இரவு, 9:00 மணிக்கு, பட்டியல் வெளியிடப்பட்டது.

ஜே.இ.இ., மெயின் மற்றும் பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில், முதல் ஸ்டீரிமின், 70 சதவீத இடங்களுக்கான ஒதுக்கீட்டில் வெளியான, பொறியியல் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலில், சென்னையைச் சேர்ந்த மாணவர் நரசிம்மன் ஸ்ரீகாந்த், முதலிடம் பெற்றார்.இரண்டாவது ஸ்டீரிமில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், சமன்படுத்தும் முறையில், 30 சதவீத இடங்களுக்கான பட்டியலில், பாலக்காடைச் சேர்ந்த, டியுதி தம்பன், 1,200க்கு, 1,191 மதிப்பெண்களுடன், தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

சட்டப் படிப்பில் சேர்வதற்கான, சமன்படுத்தும் முறையில், தெலுங்கானா மாநிலம், என்.டி.ஆர்., ஜூனியர் கல்லுாரியைச் சேர்ந்த மாணவி மைனம் ஹர்ஷினி, 98.1 சதவீதம் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் வெளியானது. இதன்படி, இணைய வழி கலந்தாய்வில் கலந்து கொள்ள, நேரம், தேதி ஆகியவை, www.sastra.edu என்ற இணையதளத்தில் உள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான, தகுதி அடிப்படையிலான இணையவழி கலந்தாய்வு வழியே, ஆக., 1 முதல், -29 வரை நடக்கும்.தஞ்சை மற்றும் திருச்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 30 சதவீத இடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.முதலாமாண்டு பொறியியல் மற்றும் சட்ட படிப்பு மாணவர்களுக்கு, இணைய வழியில் அறிமுக வகுப்புகள், ஆக., 30ல் நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X