தமிழ்நாடு

காசிமேடு மீன் சந்தையில் திருவிழா போல் கூட்டம்

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
 காசிமேடு மீன் சந்தையில் திருவிழா போல் கூட்டம்

காசிமேடு: அதிகாலையே மீன் வாங்க குவிந்தவர்களால், காசிமேடு மீன் சந்தை, திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது.

சென்னையில், மார்ச், 24 - ஆக., 31 வரை, ஏழு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிப்பட்டு வருகிறது. கடைசி இரண்டு கட்ட ஊரடங்கின் போது, பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமைகளில், முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவானது.ஊரடங்கு காரணமாக, மீன் பிடி தடை காலம் முடிந்தும், காசிமேடில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில், ஜூலை, 15ம் தேதி முதல், விசைப்படகு மீனவர்கள், படிப்படியாக ஆழ்கடலுக்கு சென்று, கரை திரும்பி வருகின்றனர். அதன்படி, இன்று முழு ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட இருப்பதால், நேற்று அதிகாலையே, காசிமேடு மீன் சந்தையில், கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.முழு ஊரடங்கு, ஆடி மாதம் மூன்றாவது வாரம் எதிரொலியாக, வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான மொத்த வியாபாரிகள், மீன் வாங்க வந்திருந்தனர்.

நேற்று, 79 விசைப்படகுகள் மட்டுமே, கரை திரும்பியதால், மீன் வரத்து குறைவாகவும், விலை பன்மடங்காக இருந்தது. வழக்கம் போல, ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், வியாபாரிகள், சமூக இடைவெளியின்றி, கூட்டம், கூட்டமாக, மீன் வாங்கி சென்றதால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகபட்சமாக, பெரிய சங்கரா, வஞ்சிரம், இறால், கேரை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகம் இருந்தன. இதே நிலை நீடித்தால், தொற்று பரவும் மையமாக உருமாறிய, கோயம்பேடு காய்கறி சந்தை போல், காசிமேடு மீன் சந்தையும் உருவெடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202020:54:44 IST Report Abuse
kulandhai Kannan இந்தியாவின் 6000 கி.மீ. கடற்கரையையும், வாழ்வாதாரம் என்ற பெயரில் கபளீகரம் செய்து, இவர்கள் செய்யும் அட்டகாசம் சொல்லி மாளாது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-ஆக-202019:26:20 IST Report Abuse
RajanRajan அண்ணே, அப்போ இனி இங்கேயும் இ-பாஸ் முறை கொண்டு வந்து துட்டு பார்துருவானுங்களோ. பேஸ் பேஸ்.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
02-ஆக-202017:36:19 IST Report Abuse
Nalam Virumbi திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.... அன்றே புலவர் பாடினார். கொரோனாவால் முடியட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X