பொதுத் துறை நிறுவனங்களுக்கு புதிய கொள்கை: மத்திய அரசு

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
பொதுத் துறை நிறுவனங்கள் புதிய கொள்கை: மத்திய அரசு


புதுடில்லி : ''பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பாக, விரைவில் புதிய கொள்கை வெளியிடப்படும்,''என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தியா, தற்சார்புடன் திகழ, அதற்கான கொள்கைகளை உருவாக்குவது அவசியம். அதன்படி,மத்திய அரசு, விரைவில் பொதுத் துறை நிறுவனங்களுக்கான புதிய கொள்கையை அறிவிக்க உள்ளது. அதில், மிகவும் முக்கிய துறைகளில், அதிகப்பட்சமாக தலா, நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் இடம் பெறும். பிற துறைகளில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படும் அல்லது நான்கு நிறுவனங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளப்படும்.முக்கிய துறைகள் எவை என்பது குறித்த விபரம், புதிய பொதுத் துறை நிறுவனக் கொள்கையில் இடம் பெறும்.


latest tamil news




அனைத்து துறைகளிலும், தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்படும்.கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மீள, கடுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்ப, அனைத்து துறைகளும் கடுமையாக போராடி வருகின்றன.பணவீக்க நிலவரத்தை மட்டும் கண்காணித்து வந்த ரிசர்வ் வங்கி, தற்போது, தொழில்துறையின் முன்னேற்றம், தாராள கடன் வசதி ஆகியவற்றுக்கும் பாடுபட்டு வருகிறது. இதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.


மாநிலங்களுக்கு இழப்பீடு



ஜி.எஸ்.டி., அறிமுகத்தால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு, அதற்கென அமைக்கப்பட்டுள்ள இழப்பீட்டு நிதியம் மூலம் ஈடு செய்யப்படுகிறது. 'வரி வசூல் குறைவால், இழப்பீட்டு நிதியத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை, மத்திய அரசு ஈடு செய்ய முடியாது. மாநிலங்கள் நிதிச் சந்தையில் கடன் வாங்கி சமாளிக்க வேண்டும்' என, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அவர் கருத்து குறித்து, விரைவில் கூட உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


ஜி.எஸ்.டி., வருவாய் குறைந்தது



கடந்த ஜூலையில், ஜி.எஸ்.டி., வருவாய், 87ஆயிரத்து, 422 ரூபாயாக குறைந்துள்ளது. இது, ஜூன் மாதம், 90 ஆயிரத்து, 917 கோடி ரூபாயாக இருந்தது. எனினும், ஏப்., மே., மாதங்களில் வசூலான தொகையை விட, ஜூலையில் அதிகம் வசூலாகி உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் அம்மணி உங்கள் நிலையே இருப்பதை விற்று தின்பது இல்லையேல் வரி போட்டு ஏழை மக்களிடம் பிடுங்கிவது இதற்கு ஒரு மந்திரி
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
02-ஆக-202013:58:26 IST Report Abuse
A.Gomathinayagam பொதுத்துறை நிறுவனங்களான ஸ்டேட் வங்கி .தேசியமாக்க பட்ட வங்கிகள் இந்தியன் ஏர்லைன்ஸ், இந்தியா உணவு கார்ப்பரேஷன், ரயில்வே,அரசு மருத்துவ மனைகள் தான், இந்த கொரநா காலத்தில் மக்கள் சேவை செய்கின்றன, அரசு கொடுக்கும் மானியத்தை மக்களிடம் சேர்ப்பது பொதுத்துறை வங்கிகள்
Rate this:
visu - Pondicherry,இந்தியா
03-ஆக-202016:35:19 IST Report Abuse
visuமக்கள் வரிப்பணத்தை மூலதனமாக்கி நடத்தப்படும் அரசு வங்கிகள் அதன் லாபத்தில் பெரும்பகுதியை ஊழியர்களின் ஊதியமாகவும் நலன்களுக்கும் செலவிடுகின்றன இவை தனியார் மயமாக்க படும்போது இந்த செலவுகள் குறையும் மக்களும் கேள்வி கேட்க முடியும் .அரசு நிறுவனங்களை நடத்துவதை விட அவற்றை கண்காணித்து சரியான வழியில் செயல் பட செய்வதே நலம் .ஏர் இந்தியா , பிஸ்னல் போன்றவை இத்தேர்க்கு உதாரணம்...
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
02-ஆக-202013:46:26 IST Report Abuse
Nallavan Nallavan பொதுத்துறை நிறுவனங்கள் என்கிற பெயரில் அரசு வணிகம் செய்வதால் ஊழல் மலிந்து நிர்வாகச் சீர்கேடு நிறைகிறது .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X