சிவசங்கர் உத்தரவில் வங்கி 'லாக்கர்' : ஸ்வப்னா ஆடிட்டர் வாக்குமூலம்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சிவசங்கர் , வங்கி 'லாக்கர்' ஸ்வப்னா,ஆடிட்டர் வாக்குமூலம்

திருவனந்தபுரம் : ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட ஸ்வப்னாவின் வங்கி 'லாக்கர்', முன்னாள் முதன்மை செயலர், சிவசங்கர் உத்தரவின் பேரில், வழங்கப்பட்டது' என, ஸ்வப்னாவின் ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு, மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, துபாயில் இருந்து, கேரளாவுக்கு 30 கிலோ தங்கம், கடத்தி வரப்பட்ட வழக்கில், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார், சந்தீப் நாயர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில், முதல்வர், பினராயி விஜயனின் முதன்மை செயலராக பதவி வகித்து வந்த, சிவசங்கருக்கு, குற்றவாளி ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது.அவர், சிவசங்கருடன் பலமுறை தொலைபேசியில் பேசியது, தெரியவந்தது. இதையடுத்து, சிவசங்கர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரிடமும், தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஸ்வப்னா மற்றும் அவரது ஆடிட்டரின் பெயரில் உள்ள வங்கி லாக்கரில் இருந்து, ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. இது குறித்து, ஸ்வப்னாவின் ஆடிட்டரிடம், சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது, சிவசங்கர் உத்தரவின் பேரில், அந்த வங்கி லாக்கர் வழங்கப்பட்டதாக, ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஆடிட்டரின் வீடு மற்றும் அலுவலகங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஸ்வப்னா மற்றும் சிவசங்கரின் வருமான வரி கணக்கை, அந்த ஆடிட்டர் தாக்கல் செய்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.இந்த வழக்கில், மேலும் ஆதாரங்களை சேகரிப்பதற்காக, மற்றொரு குற்றவாளியான ரமீஸ் என்பவரை, சிவசங்கரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன் தினம், அழைத்து சென்றனர்.அந்த அடுக்குமாடி குடியிருப்பு எதிரே உள்ள ஓட்டலில் தான், தங்க கடத்தல் தொடர்பாக, அனைவரும் சந்தித்து சதித்திட்டம் தீட்டியதாக, ஸ்வப்னா உள்ளிட்ட குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதை உறுதி செய்ய, ரமீசை, அந்த ஓட்டலுக்கு அழைத்து சென்று, பல தகவல்களை, அதிகாரிகள் உறுதி செய்து கொண்டனர்.-


-ஆக., 21 வரை நீதிமன்ற காவல்



தங்க கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை, சுங்கத்துறை அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும்,இம்மாதம் 21 வரை, நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இருவருக்கும், 'கொரோனா' பரிசோதனை செய்து, எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan Hariharan - COIMBATORE,இந்தியா
03-ஆக-202018:01:28 IST Report Abuse
Krishnan Hariharan ஆடிட்டர் எதற்கு தன் பெயரில் லாக்கர் ஒப்பன் செய்தார்? அவருக்கு ஆடிட் செய்து வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதுதானே வேலை - அவர் வாங்கிக் கணக்கில் கோடி ரூபாய் எதற்காக கட்சிக்காரர் பணத்தை வைத்து இருந்தார்? இது ஆடிட்டர் வேலையா ? இதற்கு அவர் எவ்வளவு பீஸ் வாங்கினார் ? எப்படி வாங்கினார் ? பெரிய நிறுவனத்தின் ஆடிட்டர் கூட்டாளி என்றால் , CA சட்ட விதி முறைகளை மீறலாமா ? இவர்தான் குற்றத்திற்கு உறுதுணை . இவர்களைப் போன்ற அறிவு ஜீவிகளை கட்டாயம் தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
03-ஆக-202016:22:52 IST Report Abuse
Subramanian Arunachalam ஸ்வப்னா சுதந்திரமாக கடத்தல் செய்த போது தங்கத்தின் விலை என்ன . அவரை கைது செய்த பின் தங்கத்தின் விலை கிராமுக்கு சுமார் ருபாய் ஆயிரத்து ஐநூறு விலை ஏறி விட்டது . அவரால் நடுத்தர மக்கள் பலர் ஸஹாயமான விலைக்கு தங்கம் வாங்கி பயன் அடைந்தனர் . இன்று அவர்கள் தங்கம் வாங்க முடியமால் தவிக்கின்றனர் . உடனடியாக தங்க மங்கை ஸ்வப்னாவை விடுதலை செய்து அவரை மக்கள் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
03-ஆக-202014:12:54 IST Report Abuse
Anand இவர்களுக்கெல்லாம் தலைவனான பிரனாயி விஜயனை எப்போ விசாரணைக்கு உட்படுத்துவீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X