பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தீரன் சின்னமலை நினைவு தினம்: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மரியாதை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஈரோடு: அரச்சலூர் அருகே ஓடாநிலையில், தீரன் சின்னமலை மண்டபம் உள்ளது. இங்கு அரசு சார்பில், ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், மணிமண்டபத்தில் உள்ள, தீரன் சின்னமலை சிலைக்கு, கலெக்டர் கதிரவன் தலைமையில், காலை, 8:00 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதை தொடர்ந்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவிக்கின்றனர். இதில்லாமல் பதிவு செய்யப்பட்ட, 36 கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகி கள், தலா ஐந்து பேருக்கு மட்டுமே, நேரம் ஒதுக்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், கொரேனா பரிசோதனை செய்து, நெகடிவ் என, சான்று அளிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர, வேறு யாருக்கும் அனுமதியில்லை. வழக்கமாக விழாவையொட்டி கண்காட்சி, மேடை நிகழ்ச்சி, மருத்துவ முகாம், உணவு வழங்குதல் நடக்கும். கொரோனா ஊரடங்கால், அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


பாதுகாப்பில் 500 போலீசார்: விழாவுக்கு, ஈரோடு எஸ்.பி., தங்கதுரை தலைமையில், இரண்டு கூடுதல் எஸ்.பி.,க்கள், மூன்று டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ்பெக்டர் உள்பட, 500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். கோவை பட்டாலியன் போலீசார், 80 பேரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X