பொது செய்தி

தமிழ்நாடு

குட்டிகளுடன் சாலையை கடக்க முயன்ற யானைகள்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஆசனூர்: வனப்பகுதியில், குட்டிகளுடன் சாலையை கடந்து, செல்ல முயன்ற யானைகள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த, ஆசனூர் மலைப்பகுதியில், ஏராளமான யானைகள் உள்ளன. தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் சாலையில் வனப்பகுதி உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில், குட்டிகளுடன் யானைகள், சாலையை கடந்து செல்கின்றன. நேற்று காலை மலையில் இருந்து, இரண்டு யானைகள் குட்டிகளுடன் சாலைக்கு வந்தன. ஆசனூர் - கேர்மாளம் சாலையில் நடந்து வந்து, சாலையில் இருந்து கீழேயுள்ள வனப்பகுதிக்கு, இறங்கி செல்ல முயன்றன. அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், இறங்கி செல்ல முடியவில்லை. இதனால் சாலையில் சிறிது நேரம் உலாவிய யானைகள், மீண்டும் வந்த வழியே திரும்பி, மலைப்பகுதிக்கு சென்றன. தகவலறிந்து சென்ற வனத்துறையினர், யானைகள் அருகே நின்று, வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும் வனச்சாலை வழியாக, கவனத்துடன் செல்லுமாறு எச்சரித்தனர். மலை சாலையில், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை, நிறுத்தக்கூடாது என்று, டிரைவர்களுக்கு அறிவுரை கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X