பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.51 கோடிக்கு கொப்பரை விற்பனை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஈரோடு: பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர், கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 2,644 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 91.05 ரூபாய் முதல், 101.49 ரூபாய், இரண்டாம் தரம், 49.68 ரூபாய் முதல், 96.35 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1.20 கோடி ரூபாய்க்கு விற் பனையானது. கடந்த ஏலத்தை ஒப்பிடுகையில், 300 மூட்டை வரை வரத்து குறைந்தது; விலையில் மாற்றமில்லை. இதேபோல் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நடந்தது. மொத்தம், 701 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 96.69 ரூபாய் முதல், 100.65 ரூபாய், இரண்டாம் தரம், 65.99 ரூபாய் முதல், 99.10 ரூபாய் என, 31.13 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலத்துக்கு, 14 ஆயிரத்து, 190 காய்கள் வரத்தாகின. கிலோ, 25.01 ரூபாய் முதல், 31.61 ரூபாய் வரை ஏலம் போனது.


* பவானியை அடுத்த, மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று எள் ஏலம் நடந்தது. மொத்தம், 158 மூட்டைகள் வரத்தாகின. வெள்ளை எள் கிலோ, 83.99 ரூபாய் முதல், 102.10 ரூபாய், கறுப்பு எள், 83.89 ரூபாய் முதல், 94.10 ரூபாய், சிவப்பு எள், 73.19 ரூபாய் முதல், 87.69 ரூபாய் வரை விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X