பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு 732 ஆனது; பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை, 724 ஆக இருந்தது. நேற்று எட்டு பேருக்கு தொற்று ஏற்பட்டதால், 732 ஆக உயர்ந்தது. இதில், ஈரோடு மாநகராட்சி பகுதி கருங்கல்பாளையம் சுப்பையன் வீதி, கண்ணகி வீதி, ஆர்.கே.வி.சாலை என, ஏழு பேர், பெருந்துறை அருகே திட்டம்பாளையத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டனர். ஈரோடு, நேதாஜி சாலைவீதியை சேர்ந்த, 55 வயது ஆண், உடல் நலக்குறைவால் கடந்த வாரம், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதியாகி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனால் மாவட்டத்தில், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்தது. இதுவரை, 551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 172 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X