பொது செய்தி

தமிழ்நாடு

குலாப்ஜாமுன், பாதாம்பாலுக்கு ஆசை: கொரோனா சமூக விலகலுக்கு 'குட்பை'

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கோபி: கோபி அருகே, சமூக விலகலின்றி குலாப்ஜாமுன் திருவிழா நேற்று நடந்தது.


கொடிவேரி தடுப்பணை வளாகத்தில், ஆவின் குலாப்ஜாமுன் திருவிழா நேற்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் விழாவை துவக்கி வைத்தார். கலெக்டர் கதிரவன், எஸ்.பி., தங்கதுரை, ஆர்.டி.ஓ., ஜெயராமன், ஆவின் நிர்வாக அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும், ஆவின் குலாப்ஜாமுன் மற்றும் பாதாம் பால் வழங்கப்பட்டது. அப்போது கூட்டம் அலைமோதியது. கொரோனா தடுப்பு, சமூக விலகலை மறந்து, முண்டியடித்து குலோப்ஜாமுன், பாதாம்பால் பெற்று சுவைத்தனர். இதேபோல், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர், தண்ணீர் திறக்கும் சமயத்தில், ஆளுங்கட்சியினர் முண்டியடித்து, சமூக விலகலின்றி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X