பொது செய்தி

தமிழ்நாடு

முதல் போக பாசனத்துக்கு நீர் திறப்பு: தண்ணீர் திருட்டை தடுக்க கோரிக்கை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கோபி: தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு, முதல் போகத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, மொத்தம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல் போக சாகுபடிக்கு, நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் நிர்வாக அட்டவணைப்படி, நவ.,28 வரை, 120 நாட்களுக்கு திறக்கப்படும். இதுகுறித்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் தளபதி கூறியதாவது: பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் காலங்களில், குடிமராமத்து பணி செய்யாமல், ஒரு போக சாகுபடியை நிறுத்தி, பணி மேற்கொள்ள வேண்டும். அவசரகதியில் செய்வதால், குடிமராமத்து பணி தரமின்றி போகிறது. இரு பாசன வாய்க்காலிலும். கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இரு வாய்க்கால்களிலும், நீர் திருட்டை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இரு வாய்க்காலிலும், 100 கன அடி அளவுக்கு தினமும் நீர் திருட்டு போகிறது. வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், 200 கன அடி நீரை தினமும் சேமிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X