போஸ்ட் ஆபீசில் நாளை முதல் தங்கப்பத்திரம் வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போஸ்ட் ஆபீசில் நாளை முதல் தங்கப்பத்திரம் வினியோகம்

Added : ஆக 02, 2020
Share

ஈரோடு: ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள, தலைமை தபால் அலுவலகத்தில், ரிசர்வ் வங்கி உத்தரவாதத்துடன் கூடிய தங்கப்பத்திரம் திட்டம் மீண்டும் துவங்குகிறது. நாளை முதல், 7ம் தேதி வரை, தங்கத்தின் விலை, 24 கேரட் அடிப்படையில் நிர்ணயித்து, அதிகபட்சமாக கிராமுக்கு, 5,334 ரூபாய் மதிப்பிலான பத்திரம் வழங்கப்படும். ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல், நான்கு கிலோ என்ற அளவில் முதலீடு செய்யலாம். முதலீடு காலம், எட்டு ஆண்டாகும். இதற்கு இடையில் தேவைப்பட்டால் விலகி, பணம் பெறும் வசதி உள்ளது. ஆண்டு வட்டி, 2.5 சதவீதம் என, ஆறு மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில், பூர்த்தி செய்யப்பட்ட படிவம், பான் கார்டு, ஆதார் கார்டு அல்லது, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு அல்லது, வரி செலுத்தியமைக்கான ரசீது அல்லது பாஸ்போர்ட் என, ஏதாவது ஒன்றின் நகல், தேசிய வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் ஆகியவற்றை வழங்க வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, 99653 68884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X