சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்தோடு அருகே விபத்தில் கட்டட தொழிலாளி பலி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பவானி: பவானி, குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் முனியப்பன், 59; அதே பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி, 52; இருவரும் கட்டட தொழிலாளர்கள். பெருந்துறை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மதியம், 2:00 மணியளவில், டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில் சென்றனர். அப்போது எதிரே கவனக்குறைவாக வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் தொழிலாளர்கள் இருவரும், பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்லும் வழியில் முனியப்பன் இறந்தார். லாரி டிரைவரான சென்னை, அண்ணாநகரை சேர்ந்த மரியதாஸ், 54, மீது, சித்தோடு போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X