பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி பின்பற்றாத 3 கடைக்கு 'சீல்'

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஆத்தூர்: சமூக இடைவெளி பின்பற்றாததால், இரு ஜவுளி, ஒரு மளிகை கடைக்கு, நகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில், ஆடி தள்ளுபடியை அறிவித்து, ஜவுளி கடைகளில் துணி விற்று வருகின்றனர். ஆனால், ஜவுளி, மளிகை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என, புகார் எழுந்தது. இதனால், ஆத்தூர் நகராட்சி கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில் சுகாதார பிரிவு அலுவலர்கள், நேற்று, ஆத்தூர், ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, காமராஜர் சாலை பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதில், நகராட்சி அலுவலகம் எதிரே, ராணிப்பேட்டை சாலையில் உள்ள குமார் சர்ட்ஸ், ஆனந்தம் சில்க்ஸ், லட்சுமி மளிகை கடையில், அதிகளவில் கூட்டம் இருந்தது. சமூக இடைவெளி பின்பற்றாததோடு, மக்கள், பணியாளர்கள் முக கவசம் அணியாமல் இருந்தனர். இதனால், மூன்று கடைக்கும், அலுவலர்கள், 'சீல்' வைத்தனர். அலுவலர்கள் கூறுகையில், 'ஆத்தூர் நகரில், கடந்த ஜூன், 17 முதல், இதுவரை, 90 பேருக்கு, தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று பேர் இறந்துள்ளனர். தற்போது, 23 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்துவிட்டனர். ஆனால், தொற்று அதிகரித்து வருவதால், சமூக இடைவெளி பின்பற்றாத, ஜவுளி, மளிகை என, இதுவரை, எட்டு கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X